No results found

    சிறப்பான சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்


    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு வருடம் நடத்த முதல் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்டத்தில் கலவை பேரூராட்சி சோளிங்கர் ஒன்றியம் கூடலூர் ஆகிய இடங்களில் அரசினர் மேல்நிலைப் பள்ளி களில் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களை வருகிற 24-ந் தேதி அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இப்பணியில் இணைந்து செயல்படு வார்கள் , உணவு உள்பட தேவைப்படும் அனைத்து உதவிகளும் நானே செய்து தருகிறேன். கடமைக்காக மருத்துவ முகாம் நடத்துவது என்றில்லாமல், எவ்வித பிரச்சனை இல்லாத வண்ணம் ஒரு நல்ல சிறப்பான, பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வகையில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது என்ற வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஜெ. எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி. மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் உள்பட நகரமன்ற, பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال