No results found

    புதிய தார் சாலை அமைக்கும் பணி


    முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.18.85 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூர் சாலை வழியாக மண்டலவாடி காமராஜ் நகர் முதல் கலந்தரா கூட்டுரோடு வரை வரை 1 கிலோமீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கே. ஜி. சரவணன், க.உமா கன்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் எம். மகேந்திரன் வரவேற்றார். இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை நேற்று துவக்கி வைத்தார். பொதுமக்களின் 10 ஆண்டுகால கோரிக்கைக்கு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டதால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال